அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
அட்லி இயக்கத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள ஜவான் படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றிருப்பதோடு, கடந்த 10 ஆண்டுகளில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான படங்களில் சிறந்த படம் என்ற விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இது ஷாரூக்கான் படம் என்றாலும் கூட பாலிவுட்டில் தான் என்ட்ரி கொடுத்துள்ள முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று வருவதால் உற்சாகத்தில் இருக்கிறார் நயன்தாரா. அடுத்தடுத்து அவர் ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் நுழைந்த நயன்தாரா, தனது மகன்களுடன் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். தற்போது கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தனது மகன்களுக்கு பட்டு வேஷ்டி அணிவித்து அவர்கள் பூஜை அறைக்கு தவழ்ந்து செல்வது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு, கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.