அனுஷ்காவின் ‛காட்டி' படம் மீண்டும் தள்ளிப் போகிறதா? | சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையா...? : இவானா அளித்த பதில் | திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா | சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? |
தென்னிந்திய அளவில் மிகவும் பிசியான முன்னணி நடிகையாக நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அது மட்டுமல்ல படப்பிடிப்புகளுக்காக மாறிமாறி பயணம் செய்வது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, உடற்பயிற்சி வீடியோக்களை பகிர்ந்து கொள்வது என மீடியாக்களில் தினசரி செய்திகளில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறார். சமீபத்தில் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் முதன்முறையாக அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் என்கிற செய்தி வெளியானது.
இந்த நிலையில் இவரிடம் நீண்ட நாட்கள் உதவியாளராக பணியாற்றும் சாய் என்பவரின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் ராஷ்மிகா. மணமக்கள் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.