அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
தமிழில் சாட்டை, குற்றம் 23, கொடிவீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மகிமா நம்பியார். கடந்த பத்து வருடங்களாக சீரான இடைவெளியில் படங்களில் நடித்து தமிழில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி மலையாளத்தில் இவர் நடித்த ஆர்டிஎக்ஸ் என்கிற திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படம் தற்போது 50 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்துள்ளது.
இந்த சந்தோஷத்தில் இருக்கும் மகிமாவுக்கு இந்த செப்டம்பர் மாதம் அடுத்தடுத்து அவர் நடித்த இரண்டு படங்கள் வெளியாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புக்கு ஆளான சந்திரமுகி 2 திரைப்படத்தில் மகிமா நம்பியார் நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 15ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கங்கனா தான் கதாநாயகி என்றாலும் அவர் பிளாஷ்பேக் காட்சிகளில் மட்டுமே வருவதால் நிகழ்காலத்தில் ராகவா லாரன்ஸின் ஜோடியாக மகிமா நம்பியார் தான் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அதேபோல விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக சி.எஸ் அமுதன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள ரத்தம் திரைப்படமும் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அந்த வகையில் 33 நாட்களுக்குள்ளேயே மகிமாவின் மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாவது அவரது திரையுலக பயணத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர அவருக்கு உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.