ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
‛சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. பி வாசு இயக்க, ராகவா, கங்கனா, வடிவேலு, லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, மகிமா நம்பியார், ராதிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடக்கின்றன. வரும் செப்., 15ல் படம் ரிலீஸாக உள்ளது. சமீபத்தில் பாடல்கள், டிரைலர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.
கங்கனா அளித்த பேட்டி : ‛‛பி வாசு என்னிடம் வேறு ஒரு கதையை முதலில் சொன்னார். பின் இந்தபடம் பற்றி சொன்னதும் சம்மதம் சொன்னேன். சந்திரமுகி 1 படம் பார்த்தவர்கள் நிச்சயம் என்னை ஜோதிகாவுடன் ஒப்பிடுவார்கள். நான் அவரை இதுவரை பார்த்தது இல்லை. அவரது ரசிகை நான். ஒருமுறை என்னை பற்றி ஒரு பேட்டியில் பேசி இருந்தார். ஆனால் அப்போது நான் சந்திரமுகியில் நடிக்கவில்லை. அவரது வார்த்தைகளுக்கு நன்றி. நிஜ சந்திரமுகியே நான் தான். லக்ஷ்மி என்ற ரோலில் நடித்துள்ளேன். படத்தில் எனக்கு நிறைய டான்ஸ் இருக்கு. கிளைமாக்ஸ் நிச்சயம் அதிர்ச்சி தரும்'' என்றார்.