சிவகார்த்திகேயன் சம்பளம் அதிரடி உயர்வு ? | சினிமா விருது தேர்வு நடந்து வருகிறது : சென்னை சர்வதேச திரைப்பட தொடக்க விழாவில் அமைச்சர் தகவல் | தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாராவுக்கு நோட்டீஸ் | பிளாஷ்பேக்: 80 வருடங்களுக்கு முன்பே வரதட்சனை மாப்பிள்ளைகளை வேட்டையாடிய ஹீரோயின் | பிளாஷ்பேக் : லட்சுமி பிறந்தநாள் - தலைமுறைகளை தாண்டிய நடிகை | ‛புஷ்பா 2' ; கூட்ட நெரிசலில் பெண் பலி : நடிகர் அல்லு அர்ஜுன் கைது | 100வது நாளில் 'தி கோட்' | 'புஷ்பா 2' வரவேற்பு : ராஜமவுலியை மிஞ்சினாரா சுகுமார்? | நேத்ரன் மறைவுக்கு பின் தீபா வெளியிட்ட பதிவு | பிக்பாஸ் எவிக்ஷனுக்கு பின் அர்னவின் சீரியல் என்ட்ரி |
திரிஷா இல்லேன்னா நயன்தாரா என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். தனது இரண்டாவது படமாக சிம்புவை வைத்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்கிற படத்தை இயக்கினார். அந்த படத்தை இழு இழு என்று இழுத்து இரண்டு பாகங்கள் எனக் கூறி முதல் பாகத்தை வெளியிட்டு மிகப்பெரிய தோல்வியை பரிசாக பெற்றார். அதன்பிறகு பிரபுதேவாவை வைத்து அவர் இயக்கிய பஹீரா திரைப்படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை.
இந்த நிலையில் தான் விஷாலை வைத்து அவர் இயக்கியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் செப்டம்பர் 15ம் தேதி வெளியாக இருக்கிறது. எஸ்.ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக வெளியான டீசரில் எஸ்.ஜே சூர்யா பேசிய எல்லாத்தையும் மாத்தி மறந்து மாறி வந்திருக்கிறேன் என்கிற வசனம் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி உள்ளது..
ஆதிக் ரவிச்சந்திரனை பொருத்தவரை அவர் தோல்வி படங்களை கொடுத்தவர், அப்படி அவர் கொடுத்த படங்களிலும் கூட ஆபாச நெடியே அதிகம் இருக்கும் என்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டு வந்தன. இந்த நிலையில் சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆதிக் ரவிச்சந்திரன், “நான் பழைய ஆதிக் அல்ல.. இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா பேசுவது போல 'எல்லாத்தையும் மாத்தி மறந்து மாறி வந்திருக்கிறேன்' என்கிற வசனம் உண்மையிலேயே எனக்கான வசனம் தான்” என்று கூறினார்.
அவர் சொன்னதை உறுதிப்படுத்துவது போல படத்தின் நாயகன் விஷால் கூறும்போது, “ஆதிக் ரவிச்சந்திரனுக்கு இதுதான் முதல் படம் என்று சொல்லலாம். வரும் செப்டம்பர் 15ல் இருந்து தான் அவரது திரையுலக பயணமே துவங்குகிறது” என்று கூறி உள்ளார். மார்க் ஆண்டனி வெற்றி விஷாலுக்கு மட்டுமல்ல ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் ஒரு விடியலை தரும் என நம்புவோம்.