'திருமணம்' படத்துக்கு விருது இல்லை: இயக்குனர் சேரன் ஆதங்க பதிவு | இந்த மாதம் ரீ ரிலீஸ் ஆகும் உயிர் உள்ளவரை உஷா | சந்தானத்தின் புதிய படம் பற்றிய தகவல் | மீண்டும் இணைந்த ‛ரவுடி பேபி' கூட்டணி | மமிதா பைஜூக்கு போட்டியா அனஸ்வரா ராஜன் | நம்பிக்கையுடன் காத்திருக்கும் நயன்தாரா | அர்ஜுன், ஏ.ஜி.எஸ் நிறுவனம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | புருஷன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | கென் கருணாஸின் யூத் மார்ச் மாதத்தில் திரைக்கு வருகிறது | 2026 ஜனவரியில் 22 படங்கள் ரிலீஸ் : 20 கோடி கூட லாபம் இல்லையா? |

அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் ஹிந்தியில் உருவாகியுள்ள படம் ஜவான். நயன்தாரா கதாநாயகியாக, விஜய்சேதுபதி வில்லனாக நடித்துள்ள இந்தப் படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ் நட்சத்திரங்கள் அதிகம் இந்த படத்தில் இருப்பதால் கிட்டத்தட்ட நேரடி தமிழ் படத்தை போலவே இங்கே வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னதாக வெளியான ஷாரூக்கானின் பதான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த தீபிகா படுகோன், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இவருக்கு தமிழிலும், தெலுங்கிலும் குரல் கொடுத்துள்ளார் பிரபல டப்பிங் கலைஞரும் சமீபகாலமாக நடிகையாக மாறியவருமான ரவீணா ரவி.
இது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள ரவீணா, ‛‛என்னுடைய பேவரைட் நடிகையான தீபிகா படுகோனுக்கு தமிழிலும் தெலுங்கிலும் குரல் கொடுத்ததில் மகிழ்ச்சியும் உற்சாகமுமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். மேலும், “அட்லீயுடன் இணைந்து பணியாற்றுவது எப்போதுமே மகிழ்ச்சியான ஒன்று” என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு முன்பாக நயன்தாரா நடித்த பாஸ்கர் தி ராஸ்கல், லவ் ஆக்சன் ட்ராமா ஆகிய படங்களில் நயன்தாராவுக்காக ரவீணா ரவி குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.