தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நேஷனல் கிரஷ் என பட்டம் கொடுத்து அனைவரும் அழைப்பதாலோ என்னவோ நடிகை ராஷ்மிகா தற்போது தெலுங்கு, தமிழ் படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை விட பாலிவுட்டில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே அவர் நடித்த குட்பை மற்றும் மிஷன் மஞ்சு ஆகிய படங்கள் ஹிந்தியில் வரவேற்பை பெற தவறிய நிலையில் தற்போது ரன்வீர் கபூருடன் இணைந்து நடித்துள்ள அனிமல் என்கிற திரைப்படத்தை தான் ரொம்பவும் எதிர்பார்த்து இருக்கிறார். அதுமட்டுமல்ல ஹிந்தியிலேயே தொடர்ந்து காலுன்றும் விதமாக ஷாகித் கபூருடன் அடுத்ததாக நடிக்கும் வாய்ப்பு தேடி வர அதனை ஒப்புக் கொண்டார்.
இதற்காக தெலுங்கில் நிதின் ஜோடியாக வெங்கி குடுமுலா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேடிவந்த வாய்ப்பை கால்சீட் காரணம் காட்டி ஒதுக்கினார் ராஷ்மிகா. ஆனால் தற்போது ஷாகித் கபூர் படம் பட்ஜெட் காரணமாக கைவிடப்பட்டுள்ளதாக ராஷ்மிகாவுக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இன்னும் நிதின் படத்திற்கு வேறு கதாநாயகி தேர்வு செய்யப்படவில்லை என்பதால் ராஷ்மிகாவே அந்த படத்தை ஒப்புக் கொள்வாரா, இல்லை அந்த படத்திற்கு வேறு கதாநாயகி தேர்வு செய்யப்படுவாரா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.