விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‛கருமேகங்கள் கலைகின்றன'. பாரதிராஜா, கவுதம் மேனன், அதிதி பாலன், யோகி பாபு முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் பேசிய தங்கர் பச்சான், ‛‛சமூகம் கேட்கும் கதையை உருவாக்க வேண்டி உள்ளது. ஆனால் அதற்கு தயாரிப்பாளை தேடி அலைய வேண்டி உள்ளது. அப்படியே கிடைத்தால் படத்தை வெளியிடுவது அதைவிட சிரமம். மக்களை தியேட்டர்களுக்கு வரவழைக்க வேண்டும். பெரிய நடிகர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு நல்ல படத்துக்கு கிடைப்பதில்லை. கண் முன் 100 பேரை கொல்வதை பார்க்கும் குழந்தைகள் என்னவாக வளரும். ரூ.100 கோடி, ரூ.200 கோடி என பணம் வந்தால் போதுமா. அறிவு வேண்டாமா. கலைஞனுக்கு பொறுப்பும், கடமையும் உண்டு. 10 மசாலா படங்களை காட்டினால் குழந்தைகள் அழிந்தே போய்விடுவார்கள். நான் ஒரு நல்ல படத்தை எடுத்து இருக்கிறேன் வந்து பாருங்கள் என கெஞ்சிக் கொண்டே இருக்க வேண்டுமா?'' என ஆதங்கமாக பேசினார்.