அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‛சந்திரமுகி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 18 வருடம் கழித்து தற்போது சந்திரமுகி இரண்டாம் பாகத்தை பி.வாசு இயக்கி உள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். இந்த படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 15ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
சமீபத்தில் 'சந்திரமுகி 2' படத்தில் முக்கிய வேடமான 'வேட்டையன் ராஜா' தோற்றத்தில் ராகாவா லாரன்ஸின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டனர். தொடர்ந்து இரண்டு பாடல்கள் வெளியாகின. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகின்ற ஆகஸ்ட் 25ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.