டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? |
கடந்த 12 வருடங்களுக்கு முன்பு அஜித்தை வைத்து மங்காத்தா என்கிற சூப்பர் ஹிட் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்தார். அஜித்தின் திரையுலக பயணத்தில் அந்த படம் ஒரு மைல் கல் என்று சொல்லலாம். அந்த சமயத்தில் தான் அஜித், விஜய் இருவரும் ஒன்றாக படப்பிடிப்பு தளத்தில் சந்தித்த நிகழ்வும் நடந்தது. இதனால் மங்காத்தா வெற்றியை தொடர்ந்து உடனடியாக விஜய்யை வைத்து வெங்கட்பிரபு ஒரு படத்தை இயக்குவார் என்று அப்போதே சொல்லப்பட்டது. ஆனால் அது நடைமுறைக்கு வருவதற்கு கிட்டத்தட்ட 12 வருடம் ஆகிவிட்டது.
லியோ படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தில் கதாநாயகியாக யார் நடிக்க இருக்கிறார்கள் என்கிற கேள்விதான் தற்போது திரை உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. லியோ படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து மீண்டும் நடித்துள்ளார் திரிஷா.
ஆனால் தான் இயக்கும் படத்தில் சமந்தா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட ஏற்கனவே விஜய்யுடன் நடித்த நடிகைகளுக்கு வாய்ப்பு இல்லை என சமீபத்தில் தான் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் சூசகமாக சொல்லிவிட்டார் வெங்கட்பிரபு. குறிப்பாக இதுவரை விஜய்யுடன் நடித்திராத ஒரு நடிகையைத்தான் இந்த படத்திற்கு கதாநாயகியாக தேர்வு செய்ய உள்ளாராம் வெங்கட்பிரபு. அந்த அதிர்ஷ்டம் யாருக்கு அடிக்க போகிறதோ, இன்னும் சில நாட்களில் விடை தெரிந்து விடும்.