பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
மலையாள நடிகர் துல்கர் சல்மான் தற்போது தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் அளவில் பிரபலமான நடிகராக மாறியுள்ளார். தற்போது மலையாளத்தில் அவர் நடித்துள்ள கிங் ஆப் கோதா என்கிற திரைப்படம் வரும் ஆக-24ஆம் தேதி பான் இந்தியா ரிலீசாக வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தொலைக்காட்சி, யூடியூப், சோசியல் மீடியா என பரபரப்பாக தனது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார் துல்கர் சல்மான். அப்படி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வயதான பெண் ஒருவர் தன்னிடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதால் பொது மேடையில் தான் பட்ட வலியையும் அவஸ்தையையும் மனம் திறந்து கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “பொது நிகழ்வுகளில் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பும் சில பெண்கள் புகைப்படத்திற்காக நிற்கும் தருணங்களில் எனது தாடையில் கைகளை வைத்து கொஞ்சுவது உள்ளிட்ட சில விரும்பத்தகாத செயல்களை செய்கின்றனர். குறிப்பாக ஒரு சமயம் கொஞ்சம் வயதான பெண் ஒருவர் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக நின்றபோது திடீரென எனது பின்புறத்தில் கிள்ளிவிட்டார். அவரது இந்த எதிர்பாராத செய்கையால் அதிர்ச்சி ஒருபுறம், வலி ஒரு புறம் இருந்தாலும் அதையும் பொருத்துக் கொண்டு சிரித்தபடி போஸ் கொடுத்தேன். எதற்காக சிலர் இப்படி அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள் என்று இப்போது வரை புரியவில்லை” என்று கூறியுள்ளார்.