ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா | பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர் | ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா | விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் | 2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு- பூஜாஹெக்டே வெளியிட்ட பதிவு | மண்ணே இல்லாத சாகுபடி முறை - முதலீடு செய்த சமந்தா | ரஜினியின் ஜெயிலர் 2 புதிய அப்டேட் வெளியானது | முதல் நாளில் உலக அளவில் 9 கோடி வசூலித்த விடுதலை 2 | வனிதா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு |
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கமல் இரண்டு காலக்கட்டங்களில் நடிப்பதாக தெரிகிறது. ஒன்று ஏற்கனவே தொடரும் வயதான சேனாதிபதி கேரக்டர், மற்றொன்று சேனாதிபதியின் இளமைகால பகுதி என கூறப்படுகிறது
பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது கமல் அமெரிக்காவில் இப்படம் தொடர்பான மேக்கப் மற்றும் சில டெக்னீஷியன் பணிகளுக்காக முகாமிட்டுள்ளார். அவர் வந்ததும் மீதமுள்ள படப்பிடிப்பு தொடர உள்ளது.
இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இயக்குனர் ஷங்கர் இந்த படத்திலிருந்து கமலின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். வயதான சேனாதிபதி வேடத்தில் கமல் ஸ்டைலாக போஸ் கொடுப்பது போன்று இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.