விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி | இனி இப்படி பேசமாட்டேன் ; கடும் எதிர்ப்புக்கு அடிபணிந்த மகாராஜா வில்லன் | மோகன்லால் பட ரீமேக்கில் கண் பார்வையற்றவராக நடிக்கும் சைப் அலிகான் | நடிகையிடம் மன்னிப்பு கேட்ட போதை வில்லன் நடிகர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள் | எனக்கு ஒளியும் சக்தியுமாய் இருப்பது நீங்கள்தான் அப்பா : ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் : ரம்யா சுப்பிரமணியன் எச்சரிக்கை | விமர்சனங்களைத் தடுக்க முடியுமா : நானி சொல்லும் ஆலோசனை | பாதாள பைரவி : மீட்டு பாதுகாத்த இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் | ரெய்டு 2வில் இருந்து யோ யோ ஹனி சிங் பாடிய ‛மணி மணி' பாடல் வெளியீடு |
இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதையை சொல்லும் படமாக உருவாகி உள்ளது “ஹர்காரா”. ராம் அருண் காஸ்ட்ரோ இயக்கி, நடிக்க அவருடன் காளி வெங்கட் நடித்துள்ளார். நாயகியாக கவுதமி நடித்துள்ளார். பிச்சைக்காரன் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க தேனி அருகில் மலைக் கிராமங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
பன்மொழிகளில் ஆக., 25ல் வெளியாக உள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. வில்லுப்பாட்டு கதை மூலம் ஆரம்பிக்கும் டிரைலர், காளி வெங்கட் வேடத்தை அறிமுகப்படுத்தி அவர் வழியே முதல் இந்திய தபால் மனிதனின் கதையாக விரிகிறது. ஆக்ஷன், அதிரடி, திரில்லர் என எதுவுமில்லாமல் நாம் வாழ்ந்த வாழ்க்கைக்குள் நம்மை இழுத்து செல்லும் படைப்பாக காமெடி, காதல் என அனைத்தும் நிறைந்த அம்சங்களுன் இப்படைப்பு உருவாகியுள்ளது.
இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதை சொல்லும் இந்தப்படம், இப்போதைய நகர வாழ்வியலின் சிக்கல்களையும், தொழில்நுட்பம் புகாத மலை கிராமத்தின் அழகிய வாழ்வியலையும், நாம் மறந்து போன இயற்கையோடு இணைந்த வாழ்க்கையையும் சொல்கிறது. நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவம் கிடைக்கும் என டிரைலரை பார்க்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது.
டிரைலர் லிங்க் : https://www.youtube.com/watch?v=xB0GUH44MnY&t=131s