காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் ' ஜெயிலர்'. அனிரூத் இசையில் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப் என மூன்று மொழி ஸ்டார்கள் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் நெல்சன் ஒரு பேட்டியில், "தெலுங்கில் இருந்து பாலகிருஷ்ணா சாரை நடிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். இதில் ஒரு பவர்புல் போலீஸ் கதாபாத்திரம் இருந்தது. அதில் நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால், அந்த கதாபாத்திரத்தை சரியாக வடிவமைக்க முடியவில்லை. அதனால் பாலகிருஷ்ணா உடன் இதுகுறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.