லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் புரொடக்சன்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்திய ராணுவ சம்மந்தப்பட்ட படம் என்பதால் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என தகவல் உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை நேரத்தில் சமூக வலைதளங்களில் சிவகார்த்திகேயன் தனது 21வது படத்திற்காக சிக்ஸ் பேக் உடன் ஜிம்மில் வொர்க்கவுட் செய்து வருவது போல் போட்டோ ஒன்று லீக் ஆகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் ஆச்சரியத்துடன் இந்த போட்டோவை பகிர்ந்து வந்தாலும் மறுபக்கம் நெட்டிசன்கள் இது ஒரு போட்டோஷாப் செய்த போட்டோ என்று கூறி வருகின்றனர்.