பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் வருகின்ற ஓனம் பண்டிகையை முன்னிட்டு மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள படம் 'கிங் ஆப் கோதா'. இதில் துல்கர் சல்மான், ஜஸ்வர்யா லஷ்மி, பிரசன்னா, ரித்திகா சிங், சரண், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர் . இப்படத்திற்கு சான் ரஹ்மான் மற்றும் ஜேக்ஸ் பீஜாய் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இப்படத்தின் தியேட்டர் பிஸ்னஸ் நடைபெற்று வருகிறது. இப்போது இந்த படத்தின் ஆந்திரா, தெலுங்கானா உரிமையை E4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகின்றனர் என அறிவித்துள்ளனர். கூடுதலாக இதன் உரிமையை ரூ. 2.5 கோடிக்கு வாங்கியுள்ளனர். இதுதான் தெலுங்கு சினிமாவில் அதிக விலைக்கு பிஸ்னஸ் ஆன மலையாள படம் என்கிறார்கள்.