'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கே.பாலச்சந்தரின் டாப் டென் படங்களில் ஒன்று 'அச்சமில்லை அச்சமில்லை'. நடுத்தர குடும்பங்களின் பிரச்னைகளை மையமாக வைத்து படம் இயக்கிக் கொண்டிருந்த கே.பாலச்சந்தர் இந்திய அரசியல் அமைப்பை கிண்டல் செய்து இயக்கிய படம். ஒரு படித்த நேர்மையான இளைஞன்கூட அரசியலுக்கு சென்றால் எப்படி மாறிப்போகிறான் என்பதுதான் படத்தின் கதை. அந்த இளைஞனாக ராஜேஷ் நடித்திருந்தார். அவரது மனைவியாக சரிதா நடித்திருந்தார்.
விமர்சகர்களிடையே பெரும் பாராட்டையும், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்ற இந்த படம் 100 நாட்கள் ஓடியது. 32வது தேசிய விருது விழாவில் சிறந்த தமிழ் படத்திற்கான விருதை பெற்றது.
அதோடு இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட விருது விழாவான 'இந்தியன் பனோரமா 'என்று அழைக்கப்படும் 10வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் இதுவாகும். இந்த படத்திற்கு பிறகும் பெரிய அளவில் சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்கள் திரையிடப்படவில்லை. ஆனால் சமீபகாலமாக ஒன்றிரண்டு படங்களாவது திரையிடப்பட்டு வருகிறது. இதற்கு அச்சாரமாக இருந்தது அச்சமில்லை அச்சமில்லை படம்.