நடன இயக்குனர் மற்றும் நடிகர் பிரபுதேவாவின் 60வது படமாக உருவாகியுள்ளது ' வுல்ப்' இப்படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இதில் வசிஷ்டா என் சிம்ஹா, லஷ்மி ராய், அஞ்சு குரியன், அனசுயா பரத்வாஜ், ஸ்ரீ கோபிகா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அம்ரிஷ் இசையமைக்கும் இந்த படத்தை சந்தேஷ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வருகின்ற ஆகஸ்ட் 3ம் தேதி ( இன்று) வெளியாகும் என அறிவித்துள்ளனர். அதன்படி, இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது வித்தியாசமான ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது என டீசரை பார்க்கும் போது தெரிகிறது. விரைவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.