குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
A1, பாரிஸ் ஜெயராஜ் ஆகிய படங்களை இயக்கிய ஜான்சன் அடுத்து நடிகர் யோகி பாபுவை வைத்து 'மெடிக்கல் மிராக்கல்' என்கிற படத்தை தொடங்கினார். கடந்தாண்டே இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இது யோகி பாபுவின் 200வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தர்ஷா குப்தா, மன்சூர் அலிகான், மதுரை முத்து, தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். A1 புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று ஒரு வருடம் ஆகிய நிலையிலும் ஏதோ ஒரு சில காரணங்களால் இப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். மேலும், வருகின்ற செப்டம்பர் மாதத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.