அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சரோஜா, கோவா, மேயாத மான், கப்பல் போன்ற வித்தியாசமான படங்களில் வெற்றி தோல்விகளை கடந்து நடித்து வருகிறார் நடிகர் வைபவ். தற்போது நடிகராக தனது 25வது படத்தை எட்டியுள்ளார். இயக்குனர் செரிப் இயக்கும் இப்படத்திற்கு 'ரணம்' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப், சரஸ்வதி மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அரோல் கரொலி இசையமைக்கும் இப்படத்தை மிதுன் மித்ரா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்திலிருந்து முதல் பார்வை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்தின் டீசரை வருகின்ற ஆகஸ்ட் 4ம் தேதி மாலை 5.00 மணி அளவில் நடிகர் ஜெயம் ரவி வெளியிடுகிறார் என்று அறிவித்துள்ளனர்.