‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

கடந்த 2013ம் ஆண்டில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிலம்பரசன், ஜெய், சந்தானம், ஹன்சிகா, திக்ஷா சேத், பூனம் கவுர் உள்ளிட்டோர் நடிப்பில் துவங்கிய திரைப்படம் ' வேட்டை மன்னன்'. இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி பாதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஒரு சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது. அதன்பிறகு கோலமாவு கோகிலா படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார் நெல்சன். தொடர்ந்து டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கினார்.
இப்போது ரஜினியை வைத்து 'ஜெயிலர்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து நேற்று இரவில் இருந்து ‛வேட்டை மன்னன்' படத்தை சிம்புவை வைத்து நெல்சன் தொடங்க உள்ளார் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. மேலும், வேட்டை மன்னன் பட தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி சில மாதங்களுக்கு முன்பு காலமானார். இதற்கு முன்பு நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' படம் வெளியாகுவதற்கு முன்பும் இதேபோல் வேட்டை மன்னன் படம் தொடங்குவதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.