ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‛ஜெயிலர்'. அவருடன் சிவராஜ் குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெரப், சுனில், மிர்ணா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, சிறப்பு வேடத்தில் மோகன் லால் நடித்துள்ளார். வருகிற ஆக., 10ம் தேதி படம் வெளியாக உள்ளது. சென்னையில் நேற்று(ஜூலை 28) இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் ரஜினி பேசியது தன்னை விமர்சிப்பவர்களுக்கும், சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படும் நடிகர்களுக்கு பதிலடியாகவும் அமைந்தது.
குடிப்பழக்கம் தான் எனக்கு சூனியம்
விழாவில் அவர் பேசியதாவது : ‛‛குரைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை. நாம் நமது வேலையை பார்த்துகிட்டு போய்க் கொண்டே இருக்கணும். குடிப்பழக்கம் மட்டும் எனக்கு இல்லாமல் இருந்திருந்தால் நான் இப்போது இருப்பதை விட இன்னும் உயரத்தில் எங்கோ இருந்திருப்பேன். குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக் கொண்டே சூனியம். குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் இருப்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே தயவு செய்து குடிப்பழக்கத்தை விடுங்கள்.
காட்டில் பெரிய மிருகங்களை எப்போதும் சின்ன மிருகங்கள் சீண்டிக்கிட்டே இருக்கும். உதாரணத்திற்கு கழுகை, காக்கா சீண்டிக்கிட்டே இருக்கும். ஆனால் கழுகு அமைதியாக இறக்கையை கூட ஆட்டாமல் உயரத்தில் பறந்து கொண்டே இருக்கும். காக்காவால் அது முடியாது. உலகில் உன்னதமான மொழி மவுனம் மட்டுமே.
யாருக்கும் பயப்பட மாட்டேன்
சூப்பர் ஸ்டார் டைட்டில் பிரச்னை இப்போது அல்ல, 1977லேயே ஆரம்பித்தது. சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் ரஜினி பயந்துட்டாருனு சொன்னாங்க. கடவுளுக்கும், நல்லவர்களுக்கும் மட்டுமே பயப்படுவேன். மற்ற யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்.
இவ்வாறு ரஜினி பேசினார்.




