அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை(ஜூலை 28) சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. அடுத்த மாதங்களில் வெளியாக உள்ள சில முக்கிய படங்களில் இந்தப் படம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.
பொதுவாக பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களின் இசை வெளியீடு, டிரைலர் வெளியீடு ஆகியவை நடந்தால் வேறு எந்த நடிகரும் அவர்களது பட இசை, டீசர், டிரைலர் வெளியீடுகளை அன்றைய தினம் வைத்துக் கொள்ள மாட்டார்கள். போட்டியில் சிறிய நடிகரின் படம் காணாமல் போய்விடும்.
ஆனால், நாளை ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீடு நடக்க உள்ள நிலையில் அவரது முன்னாள் மருமகனான நடிகர் தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசர் வெளியீடும் நடக்க உள்ளது. ஏட்டிக்குப் போட்டியாக இது நடக்கவில்லை. நாளை தனுஷின் பிறந்தநாள். அதனால்தான் 'கேப்டன் மில்லர்' டீசர் வெளியாகிறது. மேலும் தனுஷ் இயக்கி நடித்து வரும் அவரது 50வது படம் பற்றிய அறிவிப்பும் நாளை வெளியாக உள்ளதாகச் சொல்கிறார்கள்.