இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்தபடியாக 7-வது சீசன் தொடங்கப் போகிறது. இதையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க போகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்து அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகி வந்தநிலையில், தற்போது இன்னொரு பட்டியலும் வெளியாகி இருக்கிறது. அந்த பட்டியலில், சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நடிகர் பப்லு, தேன்மொழி பி.ஏ சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஜாக்குலின், தற்போது ஈரமான ரோஜாவே- 2 தொடரில் நடித்து வரும் நடிகர் தினேஷ், பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் நடித்த ரேகா நாயர், நடன இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் கோவையைச் சேர்ந்த பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா உள்ளிட்ட பலரது பெயர்கள் பிக்பாஸ் சீசன்- 7 பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் இவை யாவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. போட்டியாளர்கள் யார் என்பது நிகழ்ச்சி துவங்கும்போது அன்று தான் அதிகாரப்பூர்வமாக தெரிய வரும்.