ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
மலையாள நடிகர் பஹத் பாசில் மலையாள சினிமாவை கடந்து தமிழ், தெலுங்கு மொழி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடந்த 2021ல் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த படம் புஷ்பா. இதில் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் டைட்டில் டீசர் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் புஷ்பா 2ம் பாகத்திலும் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதற்காக பஹத் பாசில் பெற்ற சம்பளம் தொகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை சில கோடிகளில் மட்டும் சம்பளம் வாங்கி வந்த பகத் பாசில் புஷ்பா 2 படத்திற்காக ரூ. 6 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.