மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? |
நடிகை யாஷிகா ஆனந்த், 'இருட்டு அறையில் முரட்டுக்குத்து', 'நோட்டா', 'ஜாம்பி' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த இவரது தோழி வள்ளிசெட்டி பவானி (வயது 28). அமெரிக்காவில் தங்கி இருந்த இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை வந்திருந்தார்.
யாஷிகா ஆனந்த், வள்ளிசெட்டி பவானி மற்றும் நண்பர்கள் காரில் மாமல்லபுரம் சென்று விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற திரும்பும்போது அடுத்த சூளேரிக்காடு என்ற இடத்தில் வரும்போது கார் திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது. பின்னர் நடுரோட்டில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான வள்ளிசெட்டி பவானி உயிரிழந்தார்.
இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டாக நடைபெற்று வரும் இந்த வழக்கு தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இறுதி விசாரணைக்காக நேற்று யாஷிகா கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அரசு தரப்பு மற்றும் யாஷிகா தரப்பு வழக்கிறஞர்கள் இறுதி வாக்குவாதம் செய்தனர். பின்னர் வழக்கை வருகிற செப்டம்பார் மாதம் 29ம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன் அன்றைய தினம் யாஷிகா நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.