சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

தென்னிந்திய சினிமா மட்டுமல்லாது பாலிவுட்டிலும் சில வருடங்களுக்கு முன்பே கால்பதித்து பான் இந்தியா நடிகர் என்கிற அந்தஸ்தை பெற்று விட்டார் நடிகர் துல்கர் சல்மான். கடந்த வருடங்களில் கடைசியாக தமிழ், தெலுங்கு மொழிகளில் அவர் நடித்த படங்கள் வரிசையாக வெற்றி படங்களாக அமைந்தன. ஆனாலும் தற்பொழுது மலையாளத்தில் அவர் நடித்து வரும் கிங் ஆப் கோதா என்கிற ஒரு படம் மட்டுமே அவரது கைவசம் இருக்கிறது. அதில் மட்டுமே தற்பொழுது தீவிர கவனம் செலுத்தி வருகிறார் துல்கர் சல்மான்.
இந்த நிலையில் பிரபல பாலிவுட் மற்றும் பஞ்சாபி பாடகியான ஜேஸ்லின் ராயல் என்பவருடன் ஹீரியா என்கிற ஆல்பம் பாடலில் இணைந்து நடித்துள்ளார் துல்கர் சல்மான். அரிஜித் சிங் என்பவர் இசையமைத்துள்ள இந்த ஆல்பம் வரும் ஜூலை 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இது குறித்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு போஸ்டருடன் வெளியிட்டுள்ள துல்கர் சல்மான், “கடந்த சில மாதங்களாக மறைத்து வைத்த ஒரு விஷயம் இது.. வரும் ஜூலை முதல் உங்கள் கவனத்திற்கு வருகிறது” என்று கூறியுள்ளார்.




