ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா |
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விக்ரம் நடிப்பில் துவங்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம். இன்னும் சொல்லப்போனால் நடிகர் சூர்யா நடிப்பதாக இருந்து பின்னர் விலகிக் கொண்ட இந்த படத்தில் அதன் பின்னர் கதாநாயகனாக ஒப்பந்தமானவர்தான் விக்ரம். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பிரச்சனைகளால் தேங்கித் தேங்கி நடைபெற்று தற்போது ஒரு வழியாக ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஆனால் தற்போது இந்த படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த படத்தின் 'ஒரு மனம்' என்கிற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானபோது அந்த பாடல் குறித்த விபரங்களில் நடிகர்கள் பட்டியலில் ஐஸ்வர்யா ராஜேஷ் பெயரும் இருந்தது. ஆனால் தற்போது வெளியாகி உள்ள 'ஹிஸ் நேம் இஸ் ஜான்' என்கிற இரண்டாவது சிங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் பெயர் இடம் பெறவில்லை. இதை வைத்தே தற்போது இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன என்று சொல்லப்படுகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளித்தால் தான் உண்மை தெரியவரும்.