ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் பலர் நடிக்கும் படம் 'லியோ'. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அதே சமயம் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பாகவே இப்படத்தின் வியாபாரப் பேச்சுக்கள் ஆரம்பமாகிவிட்டன.
தற்போதைய நிலவரப்படி தமிழக வெளியீட்டு உரிமை வியாபாரம் மட்டுமே முடிவடையாமல் உள்ளதாம். தெலுங்கு டப்பிங் உரிமை, மற்ற தென்னிந்திய மாநில வெளியீட்டு உரிமை, வட இந்திய மாநில வெளியீட்டு உரிமை, வெளிநாட்டு வெளியீட்டு உரிமை, சாட்டிலைட் டிவி, ஓடிடி உரிமை ஆகியவை எதிர்பார்த்ததை விடவும் அதிக விலைக்கு விற்கப்பட்டு முடிவடைந்துவிட்டதாம்.
தமிழக உரிமையை அதிக விலைக்கு சொல்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதனால்தான் தமிழக வியாபார உரிமை பற்றிய பேச்சு வார்த்தைகள் இழுத்துக் கொண்டு போவதாகச் சொல்கிறார்கள். இருந்தாலும் அடுத்த ஓரிரு நாட்களில் அதற்கான முடிவும் எடுக்கப்பட்டுவிடும் எனத் தெரிகிறது. இந்த ஆண்டில் அடுத்து வெளிவர உள்ள படங்களில் 'லியோ' படம்தான் அதிக விலைக்கு விற்கப்படும் படமாக இருக்கும் என கோலிவுட் சீனியர்கள் தெரிவிக்கிறார்கள்.