ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை சமந்தா 'மயோசிடிஸ்' என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் அவர் தன் கைவசம் இருந்த படங்களை நடித்து முடித்து விட்டார், புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. வெளிநாட்டிற்கு சென்று 6 மாதங்கள் சிகிச்சையும், ஓய்வும் எடுக்க இருக்கிறார். இந்த 6 மாதங்கள் என்பது மேலும் நீடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. ரசிகர்கள், திரையுலகினர் அவர் பூரண நலம் பெற்றும் மீண்டும் புதிய பலத்துடன் அவர் நடிக்க வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
சிகிச்சைக்கு செல்வதற்கு முன் சமந்தா முக்கிய கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா சென்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீபுரம் தங்க கோவிலில் வழிபாடு நடத்தினார். பழனிக்கு சென்று வழிபட்டார். அடுத்ததாக அவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
“பண்ணாரி அம்மன் கோவில் அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் இங்கு நடிகைகள் தரிசனத்துக்கு வருவது மிகவும் குறைவு. இந்த பகுதியில் படப்பிடிப்பு நடந்தால் வருவார்கள். ஆனால் சமந்தா சாமி தரிசனத்திற்காகவே வந்தார். மனமுருகி பிரார்த்தனை செய்தார். சக்தி வாய்ந்த அம்மன் சமந்தாவுக்கு பூரண உடல் நலத்தையும், நீண்ட ஆயுளையும் தருவாள்” என்றார் கோவில் பூசாரி.