ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? | அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? | மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி | ஹீரோ ஆனார் ராம்கோபால் வர்மா | தர்மேந்திரா பிறந்தநாளில் ரசிகர்களின் பார்வைக்காக பண்ணை வீடு திறப்பு | தாயின் கருவில் இருந்தபோதே கேட்ட ஸ்லோகம் அது : பாலகிருஷ்ணா தகவல் | கேரளாவில் பம்பாய் பட 30ம் ஆண்டு கொண்டாட்டம் : மணிரத்னம் கலந்து கொள்கிறார் |

நடிகை கங்கனா ஹிந்தியில் பிஸியாக நடித்து வந்தாலும் தலைவி படத்திற்கு பின் தமிழ் படங்களிலும் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது தமிழில் பி வாசு இயக்கத்தில் ‛சந்திரமுகி 2' படத்தில் நடித்துள்ளார். செப்., 15ல் இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் டிரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் அஹிம்சா என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தமிழில் ஒரு முக்கிய நட்சத்திரம், ஹிந்தியில் ஒரு பிரபலம் இணைந்து நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தனர்.
தற்போது இந்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தை மலையாள இயக்குனர் விபின் இயக்குகிறார். இதில் முதல் முறையாக விஜய் சேதுபதி, கங்கனா ரணாவத் இணைந்து நடிக்கின்றனர். திரில்லர் கதை களத்தில் இப்படம் உருவாகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.




