அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
ஏ.எல்.விஜய் இயக்கிய வனமகன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் சாயிஷா. அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா போன்ற படங்களில் நடித்தவர், கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் நடித்த போது அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பிறகும் காப்பான் படத்தில் நடித்த சாயிஷா சமீபத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் நடித்து வெளியான பத்து தல படத்தில் ராவடி என்ற பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். மேலும், ஆர்யா- சாயிஷா தம்பதிக்கு 2021 ஆம் ஆண்டில் ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், மகளுடன் எடுத்துக் கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் சாயிஷா. இந்நிலையில் தற்போது தனது மகளுடன் தான் நடனமாடும் ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ஐந்து லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்று வைரலானது.