பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் |
கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடிப்பில் நாளை(மார்ச் 30) வெளியாக உள்ள படம் ‛பத்து தல'. இதில் சிம்புவுக்கு நாயகி அல்ல, கவுதம் கார்த்திக் ஜோடியாக தான் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் ‛ராவடி' என்ற பாடலுக்கு நடிகர் ஆர்யாவின் மனைவியும், நடிகையுமான சாயிஷா குத்தாட்டம் போட்டுள்ளார்.
திருமணம், குழந்தை பிறப்பு ஆகியவற்றால் ஓரிரு ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த இவர் இந்தபாடல் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். கிட்டத்தட்ட புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‛ஊ சொல்றியா...' பாடலுக்கு நிகராக ஆட்டம் போட்டுள்ளார் சாயிஷா. இந்த பாடலுக்கு 25 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்து வரவேற்பை பெற்றுள்ளன.
‛‛கணவர் ஆர்யாவின் விருப்பத்தின் பேரில் இந்த பாடலுக்கு ஆடியதாக'' கூறியிருந்தார் சாயிஷா. மூன்று மணிநேரத்தில் படமான இந்த 5 நிமிட பாடலுக்கு ரூ.40 லட்சம் சம்பளமாக அவர் பெற்றுள்ளார். அதேசமயம் படத்தின் நாயகியான பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் 28 நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவருக்கு இந்த படத்தில் பேசப்பட்ட சம்பளம் வெறும் ரூ.30 லட்சம் மட்டுமே. சாயிஷா உடன் ஒப்பிடுகையில் பிரியாவிற்கு ரூ.10 லட்சம் சம்பளம் குறைவே.
என்னதான் படத்தின் ஹீரோயின் என்றாலும் பிரபல நடிகை ஒருவர் படத்தில் கவர்ச்சி ஆட்டம் ஆடினால் அவர்களுக்கு பல மடங்கு சம்பளம் வழங்கப்படுகிறது. பாலிவுட்டில் பல முன்னணி நடிகைகள் இதுபோன்று நடனடமாடி வருகின்றனர். அவர்கள் வரிசையில் தான் சமந்தாவும் அதிகம் சம்பளம் பெற்று புஷ்பா படத்தில் ஆடினார். அந்த ரூட்டை இப்போது சாயிஷாவும் பின்பற்றி உள்ளார். இருப்பினும் இனி வரும் படங்களில் தொடர்ந்து கதாநாயகியாக நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இயக்குனர்கள் சிலரிடம் கதை கேட்டு வருகிறார்.