ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். அவர் தெலுங்கில் கதாநாயகியாக நடித்துள்ள 'தசரா' படம் இந்த வாரம் மார்ச் 30ம் தேதி பான் இந்தியா படமாக வெளிவர உள்ளது.
படத்தின் கதாநாயகனாக நானியுடன் கீர்த்தி நடிக்கும் இரண்டாவது படம் இது. இதற்கு முன்பு 'நேனு லோக்கல்' என்ற படத்தில் நடித்துள்ளார். 'தசரா' படத்தில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் கிராமத்துப் பெண்ணாக தெலங்கானா பகுதி தெலுங்கைப் பேசுபவராக நடித்துள்ளார் கீர்த்தி.
அப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான உடனேயே படத்தின் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா, கீர்த்தியை ஒல்லியாக மாற வேண்டும் என்று சொல்லிவிட்டாராம். அதற்காக 12 கிலோ வரை தன் உடல் எடையைக் குறைத்துள்ளார் கீர்த்தி. திடீரென அவர் ஒல்லியாக மாறியதன் காரணம் இதுதான். 'மகாநடி' படத்திற்குப் பிறகு கீர்த்திக்கு இந்தப் படத்தின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அடுத்ததாக 'வேதாளம்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'போலா சங்கர்' படத்தில் சிரஞ்சீவி தங்கையாக நடித்து வருகிறார் கீர்த்தி.




