மீண்டும் கதை நாயகனாக காளி வெங்கட் | பிளாஷ்பேக்: வாகை சந்திரசேகரை அறிமுகப்படுத்திய பாரதிராஜா | பிளாஷ்பேக் : மனோரமாவை ஹீரோயினாக்கிவிட்டு மறைந்த டி.ஆர்.சுந்தரம் | தனுஷ், சிம்பு பட தயாரிப்பாளர் ஆகாஷ் வீட்டில் ரெய்டு: இவர் யார் தெரியுமா...? | தக் லைப் பட விழாவில் ரஜினி கலந்து கொள்வாரா? | சென்னை பக்கம் வர மறுக்கும் சமந்தா? | ரமணா 2 உருவாக வாய்ப்பு இருக்குதா? | என்னது, ரஜினி சம்பளம் 300 கோடியா? | கோவிந்தா பாடல் நீக்கம் : சந்தானம், ஆர்யா சரண்டர் ஆனது ஏன்? | தாதாசாகேப் பால்கே பயோபிக் : இரண்டு படங்கள் போட்டி? |
சூப்பர் சிங்கர் 7வது சீசன் மூலம் சின்னத்திரைக்குள் பாடகியாக நுழைந்தவர் சிவாங்கி கிருஷ்ணகுமார். அதன்பிறகு பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இந்த பிரபலம் காரணமாக அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தது. டான், நான் சிரித்தால், காசேதான் கடவுளடா படங்களில் நடித்தார். ஆனால் சினிமாவில் அவர் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு திரும்பினார். அதோடு மீண்டும் இசை ஆல்பத்திற்கு திரும்பி இருக்கிறார்.
சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ள 'டிக்கி டிக்கி டா' என்ற இசை ஆல்பத்தில் பாடி, ஆடியுள்ளார். இந்த ஆல்பத்தை இசை அமைத்து இயக்கி சிவாங்கியுடன் ஆடியிருக்கிறார் தர்புகா சிவா. பாடலை மதன் கார்க்கி மற்றும் பாடலாசிரியரும், பாடகருமான அசல் கோளாறு ஆகியோர் இணைந்து எழுதி இருக்கிறார்கள். மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனமும், டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது.