மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

ஏஐ தொழில்நுட்பம் உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. பாலிவுட்டில் ஏஐ தொழில்நுட்பத்தில் யாரும் நடிக்காமல் ஒரு திரைப்படமே உருவாகி உள்ளது. தமிழில் முதன் முறையாக ஒரு இசை ஆல்பம் உருவாகி உள்ளது.
'வல்ல தேசம்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் என்.டி. நந்தா இந்த இசை ஆல்பத்தை உருவாக்கி உள்ளார். இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் என பன்முக திறமை கொண்ட இவர் இப்போது, இசையமைப்பாளராகவும் களமிறங்கி உள்ளார்.
லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரி மற்றும் பல முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் திரைப்படத் தயாரிப்பு, சவுண்ட் என்ஜினியரிங், மற்றும் மியூசிக் டெக்னாலஜி ஏஐ ஆகிய துறைகளில் கல்வி பயின்றுள்ளார்.
தற்போது முழுக்க முழுக்க எந்த ஒரு பங்கேற்பாளரும் இல்லாமல், தானே இசையமைத்து, பாடல் எழுதி ஏஐ மூலம் விஷுவல்களை உருவாக்கி, இந்த புதிய வீடியோ ஆல்பம் பாடலை உருவாக்கி உள்ளார்.
“என் உயிரின் ஓசை நீயே” எனும் இப்பாடல் ஒரு பெண்ணின் பார்வையில் காதலின் ஏக்கத்தை, வலியை சொல்கிறது. இப்பாடல் சில மாற்றங்களுடன் ஆங்கில வடிவிலும் உருவாகியுள்ளது. தமிழ்ப்பாடலை, சீர்காழி சிற்பி எழுதியுள்ளார். தற்போது, நந்தா, “120 ஹவர்ஸ்” எனும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படவிருக்கிறது.