பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வேதனை | ஆன்லைன் முன்பதிவு டிரெண்டிங்கில் முந்தும் 'ஹிட் 3' | ஏஐ தொழில்நுட்பத்தில் வ.உ.சி வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகும் 'நாவாய்' | 'டிடி நெக்ஸ்ட் லெவல்' டிரைலர் - கவுதம் மேனனையே கலாய்ச்சிட்டீங்களே… | பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார் | மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள் | 'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் |
கடந்த 2019ம் ஆண்டில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த திரைப்படம் கண்ணே கலைமானே. தர்ம துரை படத்தின் வெற்றிக்கு பிறகு சீனு ராமசாமி இயக்கிய படம் என்பதால் எதிர்பார்ப்போடு வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்திய பிரெஞ்சு திரைப்பட விழாவில் கண்ணே கலைமானே படம் கலந்து கொண்டு விருதுகளை வென்றது. இதில் சிறந்த நடிகை தமன்னா, சிறந்த துணை நடிகை வடிவுக்கரசி, சிறந்த தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் என மூன்று விருதுகளை இப்படம் வென்றுள்ளது.