நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' |
நடிகர் நாக சைதன்யா நடித்து சமீபத்தில் வெளிவந்த தேங்யூ, கஸ்டடி போன்ற திரைப்படங்கள் படுதோல்வி அடைந்தது. அடுத்து கார்த்திகேயா பட இயக்குனர் சேன்டோ மோன்டீடி இயக்கத்தில் நாக சைதன்யா புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவர் மீனவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குஜராத்தில் நடந்த ஒரு உண்மையான மீனவரின் காதல் கதையை மையப்படுத்தி பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்த கதையில் இசைக்கு அதிக முக்கியத்துவம் உள்ளதால் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு ‛தண்டல்' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.