டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

2023ம் ஆண்டின் அடுத்த அரையாண்டின் முதல் வெள்ளிக்கிழமையான வரும் ஜுலை 7ம் தேதி 7 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்கள் அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள்தான்.
“பம்பர், இன்பினிட்டி, எப்போதும் ராஜா, காடப்புறா கலைக்குழு, சித்தரிக்கப்பட்டவை, லில்லி, வில்வித்தை” ஆகிய ஏழு படங்கள் வெளியாக உள்ளதாக இன்று வரையில் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் எந்தப் படங்கள் வெளியாகும், எது தள்ளிப் போகும் என்பது அவை வெளியாகும் நாளன்றுதான் தெரிய வரும்.
'பம்பர்' படத்தில் வெற்றி, 'இன்பினிட்டி' படத்தில் நட்டி கதாநாயகனாக நடித்திருக்கிறார்கள். மற்ற படங்களுடன் ஒப்பிடும் போது இந்த இரண்டு படங்களில்தான் தெரிந்த முகங்கள் இருக்கிறார்கள். 'காடப்புறா கலைக்குழு' படத்தில் முனிஷ்காந்த், காளி வெங்கட் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மற்ற படங்களில் புதுமுக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
கடந்த வாரம் 'மாமன்னன்' படம் மட்டுமே முக்கியமான படமாக வெளியானது. இந்த வாரத்தில் வேறு முக்கிய நடிகர்கள் படம் எதுவும் வராத காரணத்தால் இத்தனை சிறிய படங்கள் வெளியாகிறது.




