''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் வெளியாகும் நாட்களில் காலை 8 மணிக்கு சிறப்புக் காட்சிகள் நடைபெறுவது கடந்த சில பல வருடங்களாகவே இருந்து வருகிறது. அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி அதிகாலை 4 மணி காட்சி, 5 மணி காட்சி என்று சீக்கிரமாக ஆரம்பமாகின. பின்னர், அதுவே நடுஇரவு 1 மணி காட்சி என்றும் இன்னும் சீக்கிரமாக நடந்தேறியது. கடந்த வருடம் வரை இப்படி நடைபெற்று வந்தது. அந்த சிறப்புக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் 500, 1000, 2000 வரை விற்கப்பட்டதும் சர்ச்சையை எழுப்பியது.
ஆனால், இந்த வருடம் முதல் அதில் அதிரடி மாற்றம் நடந்தது. பொங்கலை முன்னிட்டு விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' படங்கள் ஒரே நாளில் வெளியாகியது. அதில் 'துணிவு' படத்திற்கு மட்டும் நள்ளிரவு 1 மணி காட்சியும், 'வாரிசு' படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சியும் மட்டுமே சிறப்புக் காட்சிகளாக நடைபெற்றது. அதில் 'துணிவு' படத்தின் வெளியீட்டை சென்னை தியேட்டரில் கொண்டாடிய அஜித் ரசிகர் ஒருவர் லாரி மீதிருந்து விழுந்து இறந்து போனார். அந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனால் இனி அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று எதிர்ப்புகள் எழுந்தது.
கடந்த ஆறு மாதங்களாக சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானாலும் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி காட்சிகள் நடைபெறவில்லை. 8 மணிக்குப் பிறகே சிறப்புக் காட்சிகள் நடைபெற்றன. இந்நிலையில் அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'மாமன்னன்' படம் நாளை மறுதினம் ஜுன் 29ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான சிறப்புக் காட்சி காலை 9 மணிக்குதான் நடைபெற உள்ளது. எந்தத் தியேட்டரிலும் அதிகாலை 4 மணி அல்லது 5 மணி காட்சி நடைபெறவில்லை.
அமைச்சரின் படத்திற்கே அதிகாலை காட்சிகளை நடத்தாத நிலையில் தமிழகத்தில் எந்த ஒரு முன்னணி நடிகரின் படங்கள் வெளிவந்தாலும் இனி அதிகாலை காட்சிகள் நடைபெற வாய்ப்பில்லை என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். 'துணிவு' படத்திற்கான அதிகாலை காட்சியில் நடந்த இளைஞரின் அகால மரணம்தான் இதற்கெல்லாம் காரணம் என்கிறார்கள். அதன் பிறகு அனுமதியில்லாமல் அதிகாலை காட்சிகளை நடத்திய தியேட்டர்களுக்கு விளக்கம் கேட்டும் அரசு தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த விவகாரம் என்ன ஆனது என்றும் தெரியவில்லை.
இந்த வருடம் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்', விஜய் நடிக்கும் 'லியோ' உள்ளிட்ட பெரிய படங்கள் வர உள்ளன. அந்தப் படங்களுக்கும் அதிகாலை காட்சிகளுக்கான அனுமதி நிச்சயம் வழங்கப்படாது என்றே சொல்கிறார்கள்.