அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

70களின் மத்தியில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி அதன்பிறகு ஹிந்தி, மலையாளம், தமிழ் என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மாதவி. குறிப்பாக தமிழில் ரஜினிக்கு ஜோடியாக தில்லு முல்லு, தம்பிக்கு எந்த ஊரு, விடுதலை மற்றும் கமலுக்கு ஜோடியாக எல்லாம் இன்பமயம், காக்கிச்சட்டை, மங்கம்மா சபதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருவருக்குமே பொருத்தமான கதாநாயகி என்று சொல்லும் வகையில் பாராட்டுக்களை பெற்று பிரபலமானார். பின்னர் 1996ல் ரால்ப் சர்மா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு திரையுலகில் இருந்து ஒதுங்கி நியூ ஜெர்சியில் குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். அவருக்கு மொத்தம் மூன்று மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் அவரது மகள் பிரிசில்லா என்பவர் அதிக மதிப்பெண்கள் பெற்று தனது இளங்கலை கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அதுமட்டுமல்ல இவரது மதிப்பெண்களை பார்த்து இவருக்கு உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களான ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து மேல் படிப்பில் சேர்வதற்காக அழைப்பும் வந்துள்ளது. தனது மகளின் படிப்பு குறித்தும் அவரது மதிப்பெண்கள் குறித்தும் ஒரு அம்மாவாக தான் பெருமைப்படுவதாக கூறி தனது மகிழ்ச்சியை சோசியல் மீடியா பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார் மாதவி.