போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா |
ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான படம் 'ஆதி புருஷ்'. இப்படத்திற்கான புரமோஷனை படக்குழு சரியாக நடத்தாத நிலையிலும் இப்படம் 450 கோடி வசூலித்துள்ளது. இந்த வசூல் பற்றிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டது. திருப்பதியில் நடைபெற்ற ஒரே ஒரு நிகழ்ச்சியைத் தவிர இப்படத்திற்காக வேறு எங்குமே பெரிய அளவில் நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. ஏன், அதைத் தவிர்த்தார்கள் என்பதற்கும் பதிலில்லை.
இதனிடையே, இப்படம் 450 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டாலும் வசூல் ரீதியாக தோல்வியை நோக்கிப் போவதாகத்தான் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் மட்டும் இப்படத்தின் மொத்த வசூல் 100 கோடியைக் கடந்துள்ளது. தெலுங்கில் 80 கோடி, ஹிந்தியில் 70 கோடி, கர்நாடகாவில் 10 கோடி, தமிழகத்தில் 2 கோடி, வெளிநாடுகளில் 25 கோடி, கேரளாவில் 1 கோடி என நிகர வசூல் கிடைத்துள்ளதாம். 250 கோடி வரை வியாபாரம் நடந்துள்ள இப்படத்திற்கான நிகர வசூல் 188 கோடி. இன்னும் 62 கோடி வரை வசூலித்தால் மட்டுமே இப்படம் மொத்த வியாபாரத்தில் லாபத்தைக் கடக்கும் என்கிறார்கள். அடுத்து வரும் நாட்களில் இப்படம் ஓடினாலும் அந்தத் தொகை வசூலிக்க வாய்ப்பில்லையாம்.
படத்திற்காக எழுந்த சர்ச்சைகள்தான் இப்படத்தின் வசூலைப் பாதித்துள்ளது என்பது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களின் கருத்தாக உள்ளது. பிரபாஸ் நடித்து வெளிவந்த 'சாஹோ, ராதேஷ்யாம்' படங்கள் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்த நிலையில் அந்த வரிசையில் இப்படமும் சேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.