''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் பத்து நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது சில நடிகர்களுக்கு ஒத்துழைப்பு தரப் போவதில்லை என தீர்மானம் நடைபெற்றது. அந்த நடிகர்கள் யார், யார் என்று அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருந்தாலும் சில நடிகர்களின் பெயர்கள் வெளியாகி, இவர் இல்லை, அவர் இல்லை என்ற சந்தேகத்தில் முடிந்தன.
இதனிடையே, தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அதன் உறுப்பினர்களுக்கு சில தினங்களுக்கு முன்பு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் தங்களது படங்களில் நடிக்க ஒப்புக் கொண்ட, வாய் மொழியாகவோ, ஒப்பந்தம் மூலமாகவோ, நடிகர், நடிகைகளுடன் உள்ள பிரச்சினைகளை ஜுன் 28ம் தேதிக்குள் கடிதம் மூலம் அனுப்பும்படி கேட்டுக் கொண்டுள்ளார்கள். அதன்பின் இந்த விவகாரம் குறித்து நடிகர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் இடையில் விரைவில் ஒரு பேச்சுவார்த்தை நடைபெற உள்ள சூழ்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் ஜுலை 11ம் தேதி அவசரக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளது. அது தொடர்பாக உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் புதிய படங்கள் வெளியான பின் ஓடிடியில் படங்களை வெளியிடுவதற்கான கால அவகாசம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்களுடன் தியேட்டர்காரர்களுக்கான வியாபாரப் பங்கீடு குறித்த விஷயங்களும் விவாதிக்கப்படலாம்.
தமிழ் சினிமாவில் வரும் வாரங்களில் அடுத்தடுத்து சில முன்னணி நடிகர்களின் பெரிய படங்கள் வெளிவர உள்ளன. அதனால், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், திரையரங்கு உரிமையாளர் சங்கம் ஆகியவை நடத்த உள்ள சந்திப்புகள், பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த சங்கங்களைத் தொடர்ந்து வினியோகஸ்தர்கள் சங்கமும் கூட்டத்தை நடத்த வாய்ப்புள்ளது.