ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்க மும்பை சென்ற சமந்தா | கஜினி படம் ஏற்படுத்திய பெரும் தாக்கம் : சுனைனா நெகிழ்ச்சி | எப்போதுமே டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன்: நடிகை சுமன் ராணா திட்டவட்டம் | கவனமாக இருங்கள் : ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு | தெலுங்கில் ஜன., 31ல் வெளியாகும் மதகஜராஜா | சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் பட தலைப்பு ‛பராசக்தி' | மஞ்சுவாரியர் படத்தை இலவசமாக ஆன்லைனில் ரிலீஸ் செய்ய போவதாக இயக்குனர் அறிவிப்பு | மோகன்லாலை ஒரு மணி நேரம் பேட்டி எடுத்த கேரள அமைச்சர் | 2025ல் மலையாளத்தில் முதல் 50 கோடி வசூல் படமாக பதிவு செய்த 'ரேகசித்திரம்' | கிஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
தெலுங்கில் மகேஷ்பாபுவின் புதிய படமான குண்டூர் காரம் படத்தை திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இடையில் மகேஷ்பாபுவின் குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சில துக்கமான நிகழ்வுகளால் இதன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடத்த முடியாமல் அடிக்கடி தள்ளிப்போனது. இதனால் ஏற்பட்ட கால்சீட் குளறுபடி காரணமாக தற்போது இந்த படத்தில் பூஜா ஹெக்டே பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டு அவர் இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார் என்ற செய்தி கடந்த இரண்டு நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அவர் மட்டுமல்ல இந்த படத்தில் இருந்து இசையமைப்பாளர் தமன் கூட சில காரணங்களால் விலகிவிட்டார் என்றும் அவருக்கு பதிலாக அனிருத் இசையமைக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வந்தது. இந்தநிலையில் பூஜா ஹெக்டேவுக்கு பதிலாக நடிகை சம்யுக்தா அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்னதாக பீம்லா நாயக் படத்தில் ராணாவுக்கு ஜோடியாக சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் நுழைந்த சம்யுக்தா, அடுத்ததாக தனுஷுக்கு ஜோடியாக நடித்த சார் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியான விருபாக்சா ஆகிய படங்கள் மூலம் கவனிக்கத்தக்க நடிகையாக மாறியுள்ளார். இந்த நிலையில் தான் மகேஷ்பாபு படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது