இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கடந்த ஞாயிறன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தயாரிப்பாளர்களிடம் நடிப்பதற்காக முன்பணம் வாங்கிவிட்டு நடிக்க வராமல் சிக்கலை ஏற்படுத்திய சில நடிகர்களுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம் என்பதும் அந்தத் தீர்மானத்தில் ஒன்று. யார் யார் அந்த நடிகர்கள் என தயாரிப்பாளர் சங்கத் தரப்பில் வெளியிடப்படவில்லை.
இருந்தாலும் சிம்பு, விஷால், எஸ்ஜே சூர்யா, அதர்வா, யோகிபாபு, ஆகியோர்தான் அவர்கள் என அதிகாரப்பூர்வமில்லாத ஒரு தகவல் பரவியது. ஆனால், அந்தப் பட்டியலில் சிம்பு, விஷால் ஆகியோரது பெயரை வேண்டுமென்றே சிலர் பரப்பியுள்ளதாகச் சொல்கிறார்கள். சிம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையைத் தீர்த்த பிறகுதான் அவர் நடித்த 'வெந்து தணிந்தது காடு, பத்து தல' ஆகிய படங்கள் வெளிவந்தன என்றும் கோலிவுட்டில் சொல்கிறார்கள்.
பரபரப்புக்காகவும், தங்களைப் பற்றிய தவறான தகவல் வேண்டுமென்றே பரவ வேண்டும் என்ற நோக்கத்தில் யு டியுப் சேனல்களில் சிலர் இப்படி செய்கிறார்கள் என சம்பந்தப்பட்ட நடிகர்கள் தரப்பிலிருந்து தெரிவித்துள்ளார்களாம். தயாரிப்பாளர் சங்கத்தைப் பொறுத்தவரையில் அந்த நடிகர்கள் யார், யார் என்று வெளியிடாமல் இந்த விவகாரத்தை சுமூகமாக பேசித் தீர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்கள் எனத் தெரிகிறது.