ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் பலர் நடிக்கும் படம் 'லியோ'. அக்டோபர் 10ம் தேதிதான் இப்படம் வெளியாக உள்ளது. ஆனால், நாளை ஜுன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் சிங்கிளான 'நா ரெடி' பாடலை வெளியிட உள்ளார்கள். அதற்கான 33 வினாடிகள் புரோமோ நேற்று மாலை வெளியானது. அந்த வீடியோவே அதற்குள்ளாக 56 லட்சம் பார்வைகளைக் கடந்துவிட்டது. அப்படியென்றால் நாளை பாடல் வெளிவந்த பின் அது எத்தனை லட்சம் போகும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, புரோமோவில் உள்ள அந்த நான்கு வரிகளிலேயே அரசியல் கலந்த வரிகளாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
“நா ரெடி தா வரவா, அண்ணன் நா எறங்கி வரவா…
தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா…
எவன் தடுத்து என் ரூட்டு மாறாதப்பா..
தெரண்டடிக்குற பறை அடிக்கணு, நா ஆட தான்..
வெரலடிக்குற தீ பந்தம் நா ஏத்த தான்..,” என வரிகள் உள்ளன.
“இறங்கி வரவா, சிங்கத்த சீண்டாதப்பா, தடுத்தாலும் ரூட்டு மாறாதப்பா, தீ பந்தம் நா ஏத்த தான்” ஆகிய வார்த்தைகளில் உள்ள அரசியல் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு விஜய் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த வாரம் கல்வி உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு விஜய் பேசியது, அவர் அரசியலில் இறங்குவாரா, மாட்டாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. 'லியோ' படத்தின் இந்த முதல் சிங்கிளான 'நா ரெடி' பாடலில் உள்ள அர்த்தம் அவர் விரைவில் அரசியலில் இறங்குவார் என்பதையே காட்டுகிறது.




