மலையூரு நாட்டாமை மனச காட்டு பூட்டாம..: ‛டூரிஸ்ட் பேமிலி' கமலேஷ் | அனுபமாவின் அனுபவம் | 59 நாட்களில் தமிழ் கற்றேன்: ‛செம்பருத்தி பூ' ஸ்வாதி | நான் ஏன் பிறந்தேன், முத்து, மார்கன் - ஞாயிறு திரைப்படங்கள் | மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை |

சமீபத்தில் கடந்து சென்ற தந்தையர் தினத்தை கொண்டாடும் விதமாக திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் தங்களது தந்தையுடனான அனுபவங்கள் அவர்களைப் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டதை பார்க்க முடிந்தது. அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது தந்தையும் தயாரிப்பாளருமான சுரேஷ் குமாருடன் தான் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் அவரது தந்தையின் மடியில் சிறு குழந்தையாக கீர்த்தி சுரேஷ் இருப்பது போலவும் பார்ப்பதற்கு அந்த நிகழ்வு அவருக்கு பெயர் சூட்டு விழா போலவும் தெரிந்தது.
இந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் இதேபோன்ற ஒரு நிகழ்வை இப்போது மீண்டும் மறு உருவாக்கம் செய்ய விரும்பியதாக, அதாவது தனது தந்தையின் மடியில் படுத்துக்கொண்டு ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பியதாகவும் ஆனால் இப்போது அது சாத்தியமில்லை என தனது தந்தை மறுத்துவிட்டதாகவும் அதில் கூறியுள்ளார். கீர்த்தி சுரேஷின் இந்த பதிவு ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது.