குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
ஒரு திரைப்படத்தில் பெரும்பாலான காட்சிகளில் பிணமாக நடிப்பது மிகவும் அபூர்வமானது. ஒரு நாள் பிணமாக நடித்தால் கூட நடிகர், நடிகைகள் அதற்கொரு பரிகாரம் செய்வார்கள். ஆனால் நடிகை ரோகினி 'தண்டட்டி' படத்தில் 30 நாள் பிணமாக நடித்துள்ளார். இதற்கு முன் நாகேஷ் 'நம்மவர்' படத்தில் பிணமாக நடித்தார். 'ஏலே' படத்தில் சமுத்திரகனி பிணமாக நடித்தார். சமீபத்தில் வெளியான தலைக்கூத்தல் படத்தில் துணை இயக்குனர் ஒருவர் பிணமாக நடித்தார். தற்போது ரோகினி நடித்துள்ளார்.
கிராமத்து மூதாட்டியான ரோகினி மொத்த குடும்பத்தையும் தாங்கி பிடித்தவர். அவர் திடீரென இறந்து விடவே அவர் காதில் அணிந்திருந்த தண்டட்டியை யாரோ திருடிவிடுகிறார்கள். அதை கண்டுபிடிக்க வருகிறார் போலீஸ் ஏட்டு பசுபதி. இதுதான் படத்தின் கதை. இதற்காக பெரும்பாலான காட்சிகளில் பிணமாக நடித்துள்ளார் ரோகினி.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தண்டட்டி படத்தில் தங்கப் பொண்ணு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். உண்மையிலேயே அவ்வளவு பெரிய தண்டட்டி அணிந்து நடித்தது சந்தோஷமாக இருந்தது. அந்த ஊரில் ஏராளமான பெண்கள் இந்த தண்டட்டியை அணிந்து உள்ளனர். கதைப்படி நான் இறந்த பிறகு நடைபெறும் பிரச்னைகளைச் சுற்றி காட்சிகள் இருக்கும். நான் பிணமாக நடிப்பதை பற்றி எல்லாம் கவலைப்பட்டதில்லை. தொடர்ந்து இது போன்ற கேரக்டர்கள் அமைந்தால் என்னைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். என்றார்.