‛கண்ணகி' படத்தின் டிரைலர் வெளியானது | இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் | கமல் உடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக் | மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி படக்குழு | 3 படம் ரீ ரிலீஸ் குறித்து நெகிழ்ந்த தனுஷ் | பொங்கல் ரேஸிலிருந்து ஒதுங்கிய விஜய் தேவரகொண்டா படம் | யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது : கவனம் ஈர்க்கும் பைட் கிளப் டீசர் | ட்ரெயின் படத்தில் நடிக்கும் வெற்றிமாறன் | கமலின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ் : புதிய டிரைலர் வெளியானது | ஸ்ரேயா போட்டோ ஷுட்டுக்கு உதவி செய்த மகள் |
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதர்களில் ஒருவர்தான் நடிகர் நாகபாபு. இவரது மகனும் இளம் நடிகருமான வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டினரின் சம்மதத்துடன் சமீபத்தில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் விமர்சையாக நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி மற்றும் அல்லு அரவிந்த் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர். அதேசமயம் நாக பாபுவின் மகள் நிஹாரிகா கடந்த வருடம் திருமணம் ஆன நிலையில் கடந்த சில மாதங்களாகவே தனது கணவர் சைதன்யாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த நிச்சயதார்த்த நிகழ்வுக்கு நிஹாரிகாவின் கணவர் கலந்து கொள்ளவில்லை. நிஹாரிக்காவின் கணவர் சைதன்யா இந்த நிகழ்வில் வேண்டுமென்றே கலந்து கொள்ளவில்லையா அல்லது அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டதா? இல்லை இந்த கருத்து வேறுபாடு காரணமாக அவர் கலந்து கொள்ளவில்லையா என்பது தெரியவில்லை.. அதேசமயம் நிஹாரிகாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.