ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் | சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர் | தனக்கு விருது வாங்கித் தந்த படத்தை 4 வருடமாகியும் பார்க்கத் தயங்கும் ரேவதி | அறிமுகப் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பு பெற்ற சிவகுமார் முருகேசன் | 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை | மோகன்லால் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பிரியதர்ஷன் | சிரஞ்சீவிக்கு முதல் திருமண அழைப்பிதழ் வைத்த அல்லு சிரிஷ் | 10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது |

'ரங்கோலி' படத்தை இயக்கிய வாலி மோகன்தாஸ் இயக்கத்தில், எஸ்.ஆர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மலையாள நடிகர் ஷேன் நிகம் நடிக்கும் படம் 'மெட்ராஸ்காரன்'. மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர்டிஎக்ஸ், இஷ்க் படங்களில் நடித்து புகழ்பெற்ற ஷேன் நிகம், இப்படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். கலையரசன் முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார். சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக ஷூட்டிங்கை நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.
படத்தின் நாயகியாக நிஹாரிகா நடிக்கிறார். இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிஹாரிகா 2018ம் ஆண்டு விஜய்சேதுபதி ஜோடியாக 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் நடித்தார். அதன் பிறகு இப்போதுதான் நடிக்கிறார். தெலுங்கில் சில படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள நிஹாரிகா தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரும், நடிகருமான நாகேந்திர பாபுவின் மகள் ஆவார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்து சமீபத்தில் கணவரை விவாகரத்து செய்தார். தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.




